Ads (728x90)


இரண்டாவது கொரோனா அலை உருவாக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்த நிலையில் இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

கடைகள், அங்காடிகள் செயல்படும் நேரத்தை குறைத்துள்ள அவர், அலுவலக பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும், பாடசாலைகளை சமூக இடைவெளியுடன் நடத்துமாறும் பணித்துள்ளார்.

கொரோனா பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வரும் சூழலில் இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget