Ads (728x90)

பலமான அரச நிர்வாகத்தை மீண்டும் கொண்டுவரவே ஜனாதிபதிக்கு  நிறைவேற்று அதிகாரம் முழுமையாக 20 வது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ளது. இரட்டை குடியுரிமை கொண்டவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதால் எவ்வித பாதிப்பும்  ஏற்படாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின்  19 வது திருத்தம் பாராளுமன்றத்தை பலப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமை  பலவீனப்படுத்தியது. இறுதியில் நிறைவேற்றுத்துறையும், சட்டவாக்கத்துறையும் முரண்பட்டுக்  கொண்டமை மாத்திரமே    பெறுபேறாக அமைந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷவிற்கு   நிறைவேற்று  அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டதன் காரணமாகவே 30 வருட கால சிவில் யுத்தம்  குறுகிய காலத்தில் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு நாடு பொருளாதார துறையில்   முன்னேற்றமடைந்தது.

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை  ஏற்றுக்கொள்ள கூடிய விடயமாகும்.  இரட்டை குடியுரிமை கொண்டவர்   அரசியலில் செல்வாக்கு  செலுத்துவதால் எவ்விதபாதிப்பும் ஏற்படாது. ஜனாதிபதியுடன் அரசாங்கம் இணக்கமாக  செயற்படும்.    அரசாங்கம் பொறுப்பற்ற  விதத்தில் செயற்படும் வேளையில் தான் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget