Ads (728x90)

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்திற்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாத பின்னடைவை சந்தித்தது. வாக்களிப்பு மூலம் ஒரு உறுப்பினர் கூட தெரிவாகவில்லை. இருப்பினும் தேசியப்பட்டியல் ஊடாகவே ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றது.

அந்த ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வந்த நிலையிலேயே இறுதியாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget