Ads (728x90)


தியாகி திலீபனின் நினைவேந்தல் உள்ளிட்ட நினைவேந்தல்களுக்கான தடைகளை நீக்குமாறு தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அரசு பதிலளிக்காததுடன், தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நண்பகல் நல்லுார் இளஞ்கலைஞர் மண்டபத்தில் கூடிய தமிழ் கட்சிகள் அடுத்த கட்ட திட்டங்கள் தொடர்பான தீர்மானத்தை ஆராய்ந்துள்ளது. 

இந்த கூட்டத்தின் நிறைவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் தருகையில் எதிர்வரும் 26ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்துவது, 28ஆம் திகதி திங்கட்கிழமை வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget