இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 06 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 06 பேருக்கே இவ்வாறு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக இயக்கச்சிக்கு அழைத்து வரப்பட்டவர்களாவர்.
நேற்று வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் 320 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 06 பேருக்கு கோரோனா தோற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment