கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த திணைக்களத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையான அலுவலக நேரங்களில் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ உரிய பிரிவுகளுடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பொது மக்களுக்கான சேவை நேற்று தொடக்கம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி, வேரஹெர அலுவலகங்கள் மூடப்பட்டிருக்குமன அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளையும் இன்று தொடக்கம் 05 நாட்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பொது மக்கள் சேவை பெறுவதற்கான தினம் மீள் அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்திற்கான தபால் சேவையும், மத்திய தபால் பரிமாற்றகத்தின் நுகர்வோர் சேவையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment