மினுவாங்கொட கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும், 14 பேர் ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கி பழகியவர்கள் எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு NDB வங்கி கிளையின் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. NDB கிளையில் வேலை செய்ய குறித்த ஊழியர் மினுவாங்கொடயிலிருந்து வந்ததாக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனை பெரியமுல்ல பகுதி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கந்தானை மின்சாரசபையின் 12 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் ஊழியர் ஒருவரின் மகள் மினுவங்கொ பிராண்டிக்ஸ் ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அவர் தனது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த காரணத்திற்காக மற்ற ஊழியர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவை பொருட்கள் பரிமாற்று பிரிவில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment