இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ சீனாவினால் உருவாகி வரும் ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் கருத்து தெரிவித்துள்ள மைக்பொம்பியோ பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு சீனாவிடமிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களை இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இரு ஜனநாயக நாடுகளும் தமது மக்களையும், சுதந்திர உலகத்தினையும் பாதுகாப்பதற்கு இணைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எங்கள் தலைவர்களும், எங்கள் மக்களும் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி என்பது ஜனநாயகத்தின் சட்டத்தின் ஆட்சியின் வெளிப்படைத்தன்மையின் கடற்போக்குவரத்து சுதந்திரத்தின் வெளிப்படையான சுதந்திரமான இந்தோ சுதந்திரத்தின் அடிப்படையின் நண்பன் இல்லை என்பதை தெளிவாக காண்கின்றனர் என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.
புவிசார் ஒத்துழைப்பு குறித்த அடிப்படை தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையிலேயே இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.

Post a Comment