மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியின் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ். பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்குணராசா மற்றும் யாழ்.அரசஅதிபா் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது காந்திய வழியை பின்பற்றிய மாணவி ஒருவரை கௌரவித்து இந்திய துணை தூதுவரால் பரிசிலும் வழங்கப்பட்டது.
Post a Comment