இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றுக்கு நுழைவதனை 20ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்க 157 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரித்து வாக்களித்துள்ளனர்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் நேற்று இரவு 8 மணியளவில் நாடாளுமன்றில் நடைபெற்றது.
இதன்போது 20ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை நீதியமைச்சர் முன்வைத்தார். அதன்போது இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற பிரிவுக்கு தனியாக வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரினர்.
அதற்கு அனுமதி வழங்கப்பட்டு தனியாக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதற்கு 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 64 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அதனால் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றுக்கு நுழைவதனை 20ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்க அனுமதி கிடைத்தது.

Post a Comment