கம்பஹா - மினுவாங்கொட கொத்தணியில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார். அதன்படி மினுவாங்கொட கொத்தணியில் 1,591 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இராணுவ தளபதி மேலும் கூறியிருக்கின்றார்.
மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புகளை பேணிய 97 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 48 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment