Ads (728x90)


வாழ்க்கைச் செலவு மற்றும் கொரோனா நோய்த்தொற்றுடன் கூடிய கஷ்டங்களை கவனத்திற் கொண்டு அரசாங்கத்தினால் பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின்  வரி நீக்கப்பட்டுள்ளது.

வரி நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று முதல் டின் மீன் (பெரியது) 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோ 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யலாம்.

இந்த அத்தியாவசிய பொருட்கள் உட்பட 500 ரூபாவுக்கு மேல் பெறுமதியான பொருட்களை சதொச நிறுவனத்தில் கொள்வனவு செய்யும் போது ஒரு கிலோ பருப்பை 150 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நுகர்வோருக்கு சதோச விற்பனை நிலையங்களில் நியாயமான விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget