Ads (728x90)


முன்மொழியப்பட்டுள்ள 20 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டவரைவை நிறைவேற்ற வேண்டாம் என்று அமராபுர நிகாயா மற்றும் ராமஞ்ஞா நிகாயா இணைந்த மகா சங்க சபையினர் அரசை வலியுறுத்தியுள்ளனர். நேற்று காலை ஊடகவியலாளர்களுக்கு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

19 வது திருத்தச் சட்டம் ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை தெளிவாகக் காட்டியது என்றும், முன்மொழியப்பட்ட 20 வது திருத்தச் சட்டவரவு ஜனாதிபதியைச் சுற்றி ஒரு சர்வாதிகாரத்தை உருவாக்க முற்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே 20 வது திருத்த சட்டவரைவை ஆதரிப்பது தலை துண்டிக்கப்படுவதற்கு ஒப்பானதாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஊடகவியலாளர் கூட்டத்தில் பங்கேற்ற ராமஞ்ஞா நிகாயா நீதித்துறை சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அட்டங்கனே ரத்தனபால தேரர் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது பிக்குகளின் பொறுப்பு என்று கூறினார்.

நாட்டில் ஆபத்தான தொற்றுநோய் இருக்கும் நேரத்தில் இதுபோன்ற பலனற்ற அரசியலமைப்பு திருத்தத்தில் கவனம் செலுத்துவது தேவையற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget