மலையக ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன் முதற்கட்டமாக ஆசிரிய உதவியாளர்கள் சிலருக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் கண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்றது.
மலையக உதவி ஆசிரியர்களுக்கான இந்த நியமனங்கள் தொடர்பாக ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மத்திய மாகாண ஆளுநர் லலித் .யூ. கமகேவுடனான பேச்சுவார்த்தையை அடுத்து 419 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் ஆசிரிய சேவை தரம் 3-1 பிரிவிற்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக ஒன்றுகூடல்களை தவிர்க்கும் அரசாங்கத்தின் கட்டளைக்குகேற்ப முதற்கட்டமாக இவ்வாறு சிலருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. ஏனையோருக்கான நியமன கடிதங்கள் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment