Ads (728x90)


மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் 1,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 190 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் தற்போது வசிக்கும் பகுதிகளிலிருந்து வௌியேற வேண்டாம் என இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டுள்ளார். குறித்த நிறுவனத்திலிருந்து கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு பாரிய அளவில் நோய் குணங்குறிகள் காணப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொற்றுக்குள்ளான அநேகமானவர்களிடம் நோய் அறிகுறி தென்படாமை தாம் எதிர்கொண்ட முக்கிய சவால் என Brandix நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget