கொரோனா தொற்றுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகின்றன. இன்று ஆரம்பமாகும் இப்பரீட்சை நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இம்முறை 3,62,824 பரீட்சார்த்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3,19,485 பேர் புதிய பாடத்திட்டத்திலும், 43,339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
புதிய பாடத்திட்டத்தில் 2,77,580 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். 41,905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2,648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Post a Comment