நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் வழங்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சாட்சியங்களை பதிவு செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றவியல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைகள் அனைத்தும் அரச சார்பற்ற அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டதோடு அரசியல் அழுத்தங்களுடனும் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னாள் ஜனாதிபதி சாட்சியமளித்துள்ளார்.
ஆணைக்குழுவில் ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி 06 மணி நேரத்திற்கு மேலாக சாட்சியமளித்து விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார் என தெரியவருகிறது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சிறிசேன மீண்டும் நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார்.

Post a Comment