Ads (728x90)


கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் நான்கு ஆடைதொழிற்சாலைகள் மூடப்பட்டன. இன்று முதல் குறிப்பிட்ட நான்கு ஆடைதொழிற்சாலைகளும் மூடப்பட்டிருக்கும் என தொழிற்சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

நெக்ஸ்ட் ஆடைதொழிற்சாலையின் மேற்பார்வையாளர் ஒருவரும், மற்றுமொரு ஆடை தொழிற்சாலையின் தொழிலாளர் ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு தொழிற்சாலைகளின் ஊழியர்களையும் வீடுகளுக்கு திரும்புமாறும் அல்லது தங்கள் விடுதிகளிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget