Ads (728x90)


வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு பரிசோதனைக் கூடம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடையும் பயணிகளுக்கு இலவசமாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளல் மற்றும் அதன் முடிவு அறிக்கையினை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆய்வகத்தில் ஒரேநாளில் 500 பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget