Ads (728x90)


வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு முன்னால் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பொலிஸாரின் விசேட உத்தரவு அடங்கிய ஸ்டிக்கர் இன்று முதல் காட்சிக்கு வைக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட சட்ட விதி முறைகளை மீறினால் அவர்களின் அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் முடக்கப்படும் என அஜித் ரோஹாண தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget