அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையை வந்தடைந்தார்.
வலுவான இறையாண்மையுள்ள இலங்கையுடன் கூட்டு சேர்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே அவரது இந்த விஜயத்தின் நோக்கம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரமானதும் வௌிப்படையானதுமான இந்திய வலயத்திற்கான பொது நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்லவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் எதிர்பார்ப்பதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டது.
மைக் பொம்பியோ இன்று காலை இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ உத்தியோகப்பூர்வ அதிகாரத்துடன் கூடிய அமெரிக்காவின் MCC நிறுவனத்தின் பணிப்பாளர் குழுவின் தலைவராவார்.

Post a Comment