இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பு நவம்பர் முதல் வாரத்தில் இங்கிலாந்தின் பிரபல வைத்தியசாலை ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளதாக இங்கிலாந்தின் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.
நவம்பர் முதல் வாரத்திலிருந்து தடுப்பூசிக்குத் தயாராக இருக்கும்படி குறித்த வைத்தியசாலைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொருவரது எதிர்ப்பார்ப்பும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மீது இருக்கும் நிலையில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னிலையில் உள்ளன.
ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியானது கொரேனாவினால் அதிக ஆபத்தில் உள்ள இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி குறித்து ஜூலை மாதம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது 18 முதல் 55 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமானவர்களிடையே "வலுவான நோயெதிர்ப்பு சக்தியை" உருவாக்கியுள்ளதாக தடுப்பூசியை உருவாக்கியுள்ள குழு தெரிவித்துள்ளது.

Post a Comment