இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு பணிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்திலும் பொலிஸார் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதலை கட்டாயப்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக நகர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளதுடன், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
Post a Comment