மஹேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்க்ஸ் லெவென் பஞ்சாப் அணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி எந்த விக்கெட் இழப்புமின்றி வெற்றி கண்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. துடுப்பெடுத்தாட்டத்தில் 178 ஓட்டங்களை பஞ்சாப் அணி பெற்றது. அந்த அணியின் சார்பில் ராகுல் 63 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 17.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்களை பெற்று வெற்றி கண்டது. சென்னை அணி சார்பில் சேன் வாட்சன் 83 ஓட்டங்களையும், பப் டியுப்ளெஸிஸ் 87 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றனர்.
கடந்த மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த சென்னை அணிக்கு இந்த சாதனை வெற்றி மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாக ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட வாட்சன் தெரிவித்துள்ளார்.
Post a Comment