Ads (728x90)

 விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பதுடன், அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, என் தந்தை திரு. எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளா்ா என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். 

அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும், எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும், பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதையும் தொியப்படுத்திக் கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ, கட்சியில் பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது எனவும் தொிவித்துள்ளார்.

மேலும் என் பெயரையோ. புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன் என விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget