Ads (728x90)


சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாட்டில் அதிகரித்த நிலையிலும், இரண்டாம் தவணை விடுமுறைக்காகவும் பாடசாலைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் பாடசாலைகள் 09 ஆமு் திகதி மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மேலும் இரு வாரங்களுக்கு விடுமுறையை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget