கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக சுய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசினால் இடர் கால நிவாரணமாக 5,000 ரூபா பெறுமதியான உணவு பொதிகள் நாளை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதன் அடிப்படையில் 772 குடும்பங்களைச் சேர்ந்த 1,700 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் நாடு பூராகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ். மாவட்டத்திற்கான இடர் கால நிவாரண பொதிகள் நாளை முதல் அந்தந்த கிராம சேவகர்கள் ஊடாக தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது என அரச அதிபர் தெரிவித்தார்.

Post a Comment