Ads (728x90)


இந்தியாவில் இருந்து றோலர் படகில் கடத்தி வரப்பட்ட 2,800 கிலோ மஞ்சள் மன்னார் அரிப்பு பகுதியில் கற்பிட்டி மீனவர்களின் படகு மூலம் இறக்கும் சமயம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதன்போது றோலரில்  04 இந்திய மீனவர்களும் இலங்கையை சேர்ந்த இருவரும் இருந்தனர். றோலர் படகும் அதில் பயணித்த 04 இந்திய மீனவர்களும் பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த இருவர் மட்டும் கைது செய்யப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக இந்திய மீனவர்கள் நால்வரும், றோலரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேநேரம் கைதானவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கற்பிட்டிப் பகுதில் 2, 600 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது. மொத்தமாக 5,400 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டதோடு இலங்கையை சேர்ந்த இருவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தளிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget