யாழ்.கஸ்தூரியார் வீதியில் உள்ள மூன்று கடைகள் நேற்று அதிகாலையில் உடைக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளை இடப்பட்டுள்ளது.
கஸ்தூரியார் வீதியில் உள்ள ஒரு நகை கடை, துவிச்ச்கர வண்டி விற்பனை நிலையம் என்பவற்றுடன் ஓர் களஞ்சியமும் இவ்வாறு உடைக்கப்பட்டுள் உடைக்கப்பட்டுள்ளது.
இரு கடைகளின் மேற்பகுதியை பிரித்து உள் இறங்கிய திருடர் கூட்டம் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.
நகை கடையின் கூரையை பிரித்து உள் இறங்கிய திருடர்கள் அங்கிருந்த நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்தமையினால் தப்பியது. வெளியில் இருந்த கால் பவுண் நகையும் ஒரு தொகை பணமும் கொள்ளை இடப்பட்டுள்ளது. களஞ்சியத்தின் பின் கதவு உடைக்கப்பட்டிருந்த போதிலும் எவையும் களவாடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
களவாடப்பட்ட இரு வர்த்தக நிலையங்களிலும் சீ.சி.ரி.வி கமரா பொருத்தப்பட்டுள்ளபோதும் இரவு மின் இணைப்பை நிறுத்திச் சென்றதனால் அவற்றில் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து தடயவியல் பொலிசார் சகிதம் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Post a Comment