Ads (728x90)

வாட்ஸப் நிறுவனத்தின் புதிய தனிநபர் கொள்கை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 2.5 கோடி பேர் மட்டுமே பயன்படுத்தி வந்த டெலிகிராம் செயலியை கடந்த 72 மணி நேரத்தில் மேலும் 2.5 கோடி பேர் தரவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

05 பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட வாட்ஸப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தனிநபர் நிபந்தனைகள் மற்றும் கொள்கைகள் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த புதிய கொள்கைகளால் தனிநபர் தகவல்களை வாட்ஸப் பிற நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ளும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து வாட்ஸப் எதிர்ப்புகள் உருவாக தொடங்கியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மக்கள் வாட்ஸப்புக்கு பதிலாக டெலிகிராம் மற்றும் சிக்னல் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 

இந்த மாற்றத்தால் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பிலான நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளானது. தனிப்பட்ட தகவல்களை தாம் பார்க்க மாட்டோம், பகிரப்படாது என்றும் விளக்கமளித்தது.

இவ்வாறான நிலையிலேயே டெலிகிராம் பாவனையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. தமக்கு கடந்த ஆண்டில் இருந்து தினம் அதிக பயனாளர்கள் கிடைத்தே வருகின்றனர். ஆனால் 2.5 கோடி பயனாளர்கள் புதிதாக இணைந்தமை வித்தியாசமானது என டெலிகிராம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget