Ads (728x90)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான வேலைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி நேற்று இடம்பெற்றது.

மாணவர்களின் தொடர் போராட்டம், பல்வேறு அமைப்புக்கள், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் எழுந்த பெரும் கண்டனங்களை அடுத்து துணைவேந்தர் இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை மீண்டும் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிலையிலேயே நேற்றைய தினம் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடாக பொறியியலாளர்கள், நிலஅளவைலாளர்களால் குறித்த பகுதி பார்வையிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. ஆகவே கட்டுமானப் பணி வெகு விரைவாக நடைபெற்று முடியும் என யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 





Post a Comment

Recent News

Recent Posts Widget