இத்தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகளில் இழுபறிகள் நிலவிய போதிலும் ஜோ பைடன் 360 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
முன்னாள் அதிபர் ட்ரம்ப்பால் செய்யப்பட்ட மேன்முறையீடுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையும் மீறி தேர்வாளர்களால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் ஆதரவாளர்களும் அத்துமீறி நாடாளுமன்ற கட்டத்துக்குள் நுழைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் 05 பேர் உயிர் இழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த போராட்டம் ட்ரம்பின் தூண்டுதலால் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ட்ரம்ப் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்பட்டு ஏராளமானோர் பதவி விலகினர்.
இவ்வாறான பல்வேறு போராட்டங்களையும் மீறி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.
இதேபோல் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றுள்ளார்.
Post a Comment