Ads (728x90)

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டிரம்பின் சில கொள்கை முடிவுகளை மாற்றி அமைத்துள்ளார்.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.

ஜோ பைடன் கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அவற்றில் அமெரிக்கா-கனடா இடையிலான முக்கிய திட்டம் ஒன்றையும் ரத்து செய்துள்ளார். 

அதாவது அமெரிக்கா – கனடா எரிவாயு இணைப்பு திட்டமான கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்ட இரத்து உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ். எல். குழாய் அமைப்புத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அதிபர் ஒப்புதலை பைடன் திரும்பப் பெற்றுள்ளார்.

இந்த திட்டத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பூர்வீககுடி அமெரிக்கர்களும் 10 ஆண்டுகளாகப் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாளை வெள்ளிக்கிழமை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பைடன் தொலைபேசியில் பேசும்போது இந்த விவகாரத்தை பற்றி விவாதிப்பார் என்று வெள்ளை மாளிகையின் புதிய ஊடகச் செயலாளர் ஜென் சாகி தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget