Ads (728x90)

தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேட்டர் தொழிற்சாலை “பெரெண்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் ஹொரணயில் திறந்து வைக்கப்பட்டது. நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, டயர் உற்பத்தி நிறுவனத்தின் முழு செயல்முறையையும் பார்வையிட்டார்.

ஹொரண முதலீட்டுச் சபை வளாகத்தில் 155 ஏக்கர் நிலத்தில் இந்த கைத்தொழிற்சாலை அமைந்துள்ளது. ஐரோப்பிய தொழில்நுட்பத்துடனான நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தியின் 80 சதவீதம் ஏற்றுமதி நோக்கில் தயாரிக்கப்படுகின்றன. மீதமுள்ள 20 சதவீத உற்பத்தி உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படவுள்ளது. இதன் முதல் தொகுதி உற்பத்தி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.





Post a Comment

Recent News

Recent Posts Widget