Ads (728x90)

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த  அறிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மூவர் கொண்ட புதிய ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு , ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் நியமித்த இலங்கையின் பொறுப்புக்கூறல்கள் குறித்த நிபுணர்கள் குழு ( தருஸ்மன் குழு அறிக்கை) காணாமல்போனவர்கள் குறித்த முறைப்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை ( மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு) போன்றவை தெரிவித்த விடயங்கள் குறித்து புதிய ஆணைக்குழு ஆராயும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், நீண்ட காலம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை தெரிவிக்கவுள்ளது. 

அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தலாமா என ஆராய்ந்து இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளிற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்களை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார செயலாளர் ஒரு வார காலத்திற்குள் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget