தொல்லியல் திணைக்களத்தால் திடீரென மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களால் வலி.கிழக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டது.
முன்னறிவித்தல் ஏதுமின்றி இந்தப் பணியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபட்டுள்ள நிலையில் சம்பவத்தை அறிந்த வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தவிசாளர் தியாராஜா நிரோஷ் தலைமையிலான குழுவினர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடன் இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர்.
இதற்கு இது ஒரு சாதாரண தொல்லியல் ஆய்வு. இந்த ஆய்வு தொடர்பாக நாம் அறிக்கை சமர்ப்பிப்போம். இந்த இடத்தில் சிலைகளோ அல்லது வேறு நிர்மாணங்களோ உருவாக்கப்பட மாட்டாது என்று தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
Post a Comment