யுத்தத்தின் தீங்கு விளைவிக்கும் மரபுகளை அடையாளப்படுத்துவதற்கும், நாட்டில் நிலையான சாமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பதையும் குறித்த நாடுகள் அந்த அறிக்கையூடாக வலியுறுத்தியுள்ளன.
இலங்கை மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் இலங்கையில் பொறுப்புடைமை , நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கமான சமாதானத்திற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
உட்கட்டமைப்பு வசதிகளை மீள கட்டியெழுப்புதல், கண்ணிவெடி அகற்றல், நிலங்களை மீள ஒப்படைத்தல் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் என்பவற்றில் இலங்கை அரசாங்கம் எட்டியுள்ள தேர்ச்சியை நாம் அங்கீகரிப்பதை வரவேற்கின்றோம்.
எவ்வாயினும் யுத்தத்தின் தீங்கு விளைவிக்கும் மரபுகளை அடையாளப்படுத்துவதற்கும் நாட்டில் நிலையான சாமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பது தெளிவாகிறது.
இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கவனம் செலுத்தும்.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை அடையாளப்படுத்துவதற்கான தொடரும் முக்கியத்துவத்தினை இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடாத்தும் பிரதான நாடுகள் மீள வலியுறுத்துகின்றன.
Post a Comment