Ads (728x90)

செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயில் தரை இறங்கியுள்ளது. 

செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தனது முதல் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா? என்ற ஆய்வுக்காக இந்த விண்கலம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விண்கலம் 07 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் விண்கலத்தில் இருந்து ரோபோடிக் ரோவர், ஜெசிரோ பள்ளத்தில் இலங்கை நேரப்படி அதிகாலை 02 மணி அளவில் தரையிறங்கியது. இதன்பிறகு செவ்வாயை படம் பிடித்து முதல் படத்தை நாசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஓராண்டுக்கு (687 நாட்கள்) ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 07 மாத காலமாக விண்வெளி பயணம் மேற்கொண்ட பெர்சவரன்ஸ் இன்று செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget