Ads (728x90)

இந்தியாவிலிருந்து  5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா-ஜெனெகா கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை இந்தியன் ஏயர் லைன்ஸின் கட்டுநாயக்க விமான நிலைய மேலாளர் சரநாத் பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவை இறக்கப்பட்டவுடன் அது இறக்குமதி சரக்கு சேமிப்பு வளாகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்டது.

இதேவேளை கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget