இந்நிலையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்வதை நிராகரித்துள்ளனர். முன்னுரிமை வழங்கி தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க வேண்டியவர்களுக்கு முதலில் அதனைப் பெற்றுக் கொடுக்குமாறும் பின்னர் தாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோரே இவ்வாறு நேற்று தடுப்பூசியை நிராகரித்துள்ளனர்.
10 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கிய பின்னரே தான் தடுப்பூசி பெறுவதாக ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
தொழிலாளர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment