பிரிட்டனில் புதிய கோவிட் -19 மாறுபாட்டின் காரணமாக அந்த நாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு அரசு அறிமுகப்படுத்திய தற்காலிக பயணத் தடை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட 14 நாள்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்பட்டு பிரிட்டனில் இருந்து பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் அறிமுகப்படுத்திய வழிகாட்டுதலின் கீழ் பிரிட்டனிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மீண்டும் தொடங்கும்.
அவ்வப்போது பி.சி.ஆர் சோதனைகளை முன்னெடுக்கும் வகையில் சுற்றுலா பயணிகளை இலங்கை அனுமதித்துள்ளது.
Post a Comment