Ads (728x90)

காரைநகரில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட இருந்த அளவீட்டு பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் கடற்படையின் தேவைக்காக குறித்த காணியை அளவீடு செய்வதற்கு இன்று காலை முயற்சிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் தலைவர்களின் கடுமையான எதிர்ப்பால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான 02 பரப்பு காணி மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான 06 பரப்பு காணி என மொத்தம் 08 பரப்பு காணியை கடற்படையின் எலாற கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், செ.கஜேந்திரன், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரட்ணம் உள்ளிட்ட பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget