Ads (728x90)

கெரவலப்பிட்டியவில் இலங்கையின் முதலாவது திண்மக் கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

இத்திண்மக் கழிவு மின் உற்பத்தி நிலையத்தில் நாளொன்றுக்கு 600-800 தொன் நகர திண்மக் கழிவை பயன்படுத்தி தேசிய மின் கட்டமைப்பிற்கு 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொழும்பு நகரின் திண்மக் கழிவை அகற்றுவதற்கு நிலையான தீர்வொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அத்துடன் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கும் இத்திட்டம் நிலையான தீர்வாக அமையும் எனவும் பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget