காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் இணைந்து காணியை அளவீடு செய்ய வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தியதால் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டது.
காரைநகர் ஜே.45 பிரிவுக்கு உள்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை முகாம் அமைக்கும் தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காணி உரிமையாளர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பலர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
இப்போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன், அக்கட்சியின் பேச்சாளர், சட்டத்தரணி க. சுகாஷ் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment