கேரள கடற்பரப்பில் திருவனந்தபுரத்திற்கு அருகே இந்த படகை இந்திய கரையோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்த ரவிஹன்சி என்ற படகினை கைப்பற்றியதுடன் 06 இலங்கை பிரஜைகளை கைது செய்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கரையோர காவல்படையினருக்கும், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினருக்கும் கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த படகு இடைமறிக்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
300 கிலோ ஹெரோயினையும், ஐந்து ஏகே - 47 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளோம். பல முக்கியமான ஆவணங்களும் சிக்கியுள்ளன என இந்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
301 பொதிகளில் போதைப்பொருள் காணப்பட்டது. படகின் நீர்தாங்கிக்குள் அவற்றை மறைத்து வைத்திருந்தனர் எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது போதைப்பொருட்கள், ஆயுதங்களுடன் ஈரானின் சபஹர் துறைமுகத்திலிருந்து வந்த கப்பலொன்று நடுக்கடலில் வைத்து இலங்கையர்களிடம் அவற்றை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் போதைப்பொருட்களையும், ஆயுதங்களையும் இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி இடம்பெற்றவேளையே இந்திய அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
எல்வை நந்தன, எச்.கே.ஜி.பி தாசப்பிரிய, ஏ.எச்.எஸ் குணசேகர, எஸ்,ஏ செனெரத், டி நிசங்க என்ற ஐந்து இலங்கையர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பாக்கிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் குழுவொன்று இதில் தொடர்புபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக இந்திய அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

Post a Comment