இதற்கான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்தில் மொத்தம் 27 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ளது.
யாழ்.மாவட்டத்தின் கஷ்டப்பட்ட பிரதேசங்களான தீவகம் மற்றும் மருதங்கேணி பகுதிகளின் எதிர்காலக் கல்வியை மேம்படுத்தும் முகமாக விசேட திட்டத்தின் கீழ் தீவகத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயம், அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி ஆகிய 3 பாடசாலைகளும், மருதங்கேணியில் அம்பன் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையும் விசேட பாடசாலை தரத்திற்கு மாற்றப்படவுள்ளது.
இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், கல்வி அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர்களும் இணையவழி ஊடாக கலந்து கொண்டனர்.

Post a Comment