Ads (728x90)

கொழும்பில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் கோவிட்-19  தடுப்பூசி பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்ய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையினால் இப்புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர சபை ஆணையாளர் சட்டத்தரணி ரோஷணி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு 01-15 வட்டாரப்பிரிவுகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், www.colombo.mc.gov.lk. ஊடாக அல்லது eChannelling.com தளத்தில் நேரடியாகச் சென்று தங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்குவதன் மூலம், கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget