Ads (728x90)

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பெரும்பாலும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டு நாட்டுக்கு வருவோருக்கு தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

மேலும் 96 மணித்தியாலங்களுக்கு குறைந்த காலத்தில் நாட்டிலிருந்து வெளியில் சென்று வாயு குமிழின் கீழ் மீண்டும் வருகை தருவரானால் அத்தகைய நபர் ஏழு நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, அதனையடுத்து 05 தினங்களுக்கு பின்னர் பிசிஆர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவார்.

அவ்வாறின்றி நான்கு நாட்களுக்கு மேல் வெளிநாடு சென்று மீண்டும் நாட்டுக்கு திரும்புவோருக்கு உடனடியாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் ஐந்து அல்லது ஏழு நாட்களுக்குள் இரண்டாவது பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் அவரை விடுவிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் அதற்கான செயல்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget