Ads (728x90)

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. 

இந்நிலையில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட மாறுபாடடைந்த கொரோனா தொற்றுகளும் உலக நாடுகளில் பரவி வருகின்றன.

இந்நிலையில் சமீப காலமாக பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் இவ்வகை புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகரமான பாரிஸ் உட்பட 15 முக்கிய நகரங்களில் ஒரு மாத கால முழு ஊரடங்கை பிரான்ஸ் அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget