இப்பேரணி மாலை 3.30 க்கு கொழும்பு – டெக்னிகல் சந்தியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணியினர் கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணியாக சென்றனர்.
இதன்போது காடழிப்பின் மூலம் எதிர்காலத்தில் சுவாசிப்பதற்கு ஒட்சிசன் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆதிவாசிகளை போன்றும், மேற்கத்தையோரைப் போலவும், உள்நாட்டவர்களைப் போலவும் ஆடை அணிந்திருந்தவர்கள் செயற்கை சுவாசக்கருவிகளைப் பொறுத்தியவாறு பேரணிக்கு முன்னால் சென்றனர்.
பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, ஹரினி அமரசூரிய, நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க மற்றும் சுனில் ஹந்துநெத்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment